சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை மீள்பரிசீலனை செய்யுமாறு பானுக ராஜபக்ஷவிடம் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இளம் வீரர் என்ற வகையில், நாட்டுக்காக கிரிக்கெட்டை தொடர்ந்து விளையாடும் திறன் கொண்டவர் என்ற வகையில், அவசர முடிவுகளை எடுப்பதை விட சவால்களை எதிர்கொள்வதே முக்கியம் என்றும் அமைச்சர் ராஜபக்ஷ வலியுறுத்தினார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாட்டை விட்டு வெளியேற வீரர்களுக்கு உரிமை உண்டு என்று கூறிய அமைச்சர், நிர்வாகத்தில் பிரச்சினை ஏற்பட்டாலோ அல்லது அநீதி இழைக்கப்பட்டாலோ தலையிட வாய்ப்பு இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
எனவே இலங்கை கிரிக்கெட்டில் இருந்து விலகும் முடிவை மீள்பரிசீலனை செய்யுமாறு பானுகா ராஜபக்ஷவிடம் விளையாட்டுத்துறை அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment