சிவனொளிபாத மலைக்கு வந்த யாத்திரிகர் ஒருவர் தனக்குத்தானே தீ வைத்து கொண்டுள்ளார்.
இன்று (03) அதிகாலை 2.00 மணியளவில் நல்லதண்ணி நகரிலுள்ள தனியார் பேருந்து தரிப்பிடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக, நல்லதண்ணி பொலிஸ் நிலையம் தெரிவித்துள்ளது.
குடும்பத் தகராறு காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, படுகாயம் அடைந்த நிலையில் அவர் 1990 ஆம்புலன்ஸ் வண்டி மூலமாக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இது குறித்து நல்லதண்ணி பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment