பாகிஸ்தானில் வெடி விபத்து : 15 பேர் பலி, 16 பேர் காயம் - News View

About Us

About Us

Breaking

Sunday, December 19, 2021

பாகிஸ்தானில் வெடி விபத்து : 15 பேர் பலி, 16 பேர் காயம்

பாகிஸ்தானின் கராச்சியில் சனிக்கிழமையன்று இடம்பெற்ற வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வடைந்துள்ளது.

கராச்சியின் ஷெர்ஷா பகுதியில் அமைந்துள்ள கட்டிடமொன்றில் இடம்பெற்ற இந்த வெடிப்பில் மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனர்.

வெடிப்பிற்குப் பின்னர் இடிந்து விழ்ந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க அதிகாரிகள் இன்னும் முயற்சித்து வருகின்றனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவத்தின் பின்னர் பொலிஸ் மற்றும் மீட்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்ததுடன், காயமடைந்தவர்களை அருகிலுள்ள வைத்தியசாலைக்கும் கொண்டு சேர்த்துள்ளனர்.

இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என்றும் கூறப்படுவதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் குண்டு வெடிப்பு குறித்து விசாரணை நடத்தி வரும் பொலிஸார் இதன் பின்னணி குறித்தும் ஆராய்ந்து வரும் நிலையில், பாதாள சாக்கடை கால்வாயில் ஏதோ எரிவாயு தீப்பிடித்ததால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியின் ஷெர்ஷா பகுதியில் உள்ள ஒரு வங்கி கட்டிடத்தின் அடியில் உள்ள பாதாள சாக்கடை கால்வாயில் இருந்து நேற்று திடீரென குண்டு வெடித்ததுபோன்று சத்தம் கேட்டது. 

தீப்பிழம்புகள் எழுந்தன. அருகில் உள்ள கட்டிடங்களில் கண்ணாடிகள் உடைந்தன, வாகனம் சேதமடைந்தது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 16 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சாக்கடை கால்வாயில் ஏதோ எரிவாயு தீப்பிடித்ததால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் எந்த வகையான வாயு தீப்பிடித்தது, யாராவது பற்ற வைத்தார்களா? என்பது குறித்து தெரியவில்லை. வெடிகுண்டு நிபுணர்கள் குழு சம்பவ இடத்தில் ஆய்வு செய்கின்றனர். 

நகரின் பல்வேறு இடங்களில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள், பெரும்பாலும் சட்ட விரோதமாக, கான்கிரீட் கட்டமைப்புகளை அமைத்து மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment