இலங்கையில் ஜனவரி முதல் தடுப்பூசி அட்டை கட்டாயம் - News View

About Us

About Us

Breaking

Sunday, December 19, 2021

இலங்கையில் ஜனவரி முதல் தடுப்பூசி அட்டை கட்டாயம்

ஜனவரி முதலாம் திகதி முதல் பொது இடங்களுக்குள் பிரவேசிக்கையில் கொவிட்-19 தடுப்பூசி அட்டையை உடன் வைத்திருத்தல் கட்டாயமாக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற விசேட சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கொவிட் தடுப்புக் குழுவினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தனிநபர் ஒருவரின் தடுப்பூசி நிலையை கண்டறிய QR குறியீடு முறையை பயன்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

எனவே கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்தில் தடுப்பூசியை பெற்றுக் கொள்வது சகல பிரஜைகளின் பொறுப்பாகும் எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் 15,964,289 நபர்கள் கொவிட்-19 க்கு எதிராக குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 13,803,820 நபர்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

No comments:

Post a Comment