புத்தளத்தில் உயிரிழந்த யானையை புதைத்தவர் கைது : இரண்டு தந்தங்களும் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, November 27, 2021

புத்தளத்தில் உயிரிழந்த யானையை புதைத்தவர் கைது : இரண்டு தந்தங்களும் மீட்பு

புத்தளம், கல்லடி 6 ஆம் கட்டை பகுதியில் உயிரிழந்த யானை ஒன்றை குழிதோண்டி புதைத்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் ஒருவர் புத்தளம் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், உயிரிழந்த நிலையில் இரண்டு நீளமான தந்தங்களுடன் புதைக்கப்பட்ட குறித்த யானையின் உடலமும் நேற்றையதினம் தோண்டியெடுக்கப்பட்டதாகவும் புத்தளம் வனஜீவராசிகள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் எரந்த கமகே தெரிவித்தார்.

குறித்த பகுதியிலுள்ள காணியில் பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டிருக்கும் மின்சார வேலியில் சிக்கி மேற்படி யானை கடந்த புதன்கிழமை உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்திற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த பகுதியில் விஷேட தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

இதன்போதே, மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்த யானை புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் காணியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், குறித்த யானையின் இரண்டு தந்தங்களையும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தமது பொறுப்பில் எடுத்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை புத்தளம் நீதிமன்றில் ஆஜர்படுத்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

புத்தளம் நிருபர் ரஸ்மின்

No comments:

Post a Comment