சேதனப் பயிர்ச் செய்கைக்காக 35,000 பில்லியன் ரூபாவை ஒதுக்குவதாக கூறிய போதும், வரவு செலவுத் திட்டத்தில் அதனைக் காணவில்லை. சேதன விவசாயத்திற்காக விவசாயிகளுக்கு 6 இலட்சம் ரூபாவை கொடுக்கும் அதேவேளை மறுபக்கம் இரசாயன உரத்தை கொண்டு வர திட்டமிடுகின்றனர். அப்படியாயின் சேதனப் பயிர்ச் செய்கைக்காக வழங்கப்பட்ட நிதிக்கு என்னவானது என மனுஷ நாணயக்கார கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் கமத்தொழில் அமைச்சு , நீர்ப்பாசன அமைச்சு உள்ளிட்ட நான்கு அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், இரசாயன உரத்திற்கான தடையை எக்காரணத்திற்காகவும் நீக்க மாட்டேன் என்று அடிக்கடி ஜனாதிபதி கூறிவந்தார். சர்வதேச நாடுகளுக்கும் இதனை கூறினர். ஆனால் இறுதியில் அந்த வர்த்தமானிகளை மீளப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இதேவேளை பசுமை விவசாயத்திற்காக பஷில் தலைமையில் செயலணியும் அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் தமது பணிகளை நிறைவேற்றியுள்ளனர்.
இந்நிலையில் விசாயத்துறைக்கு ஏற்பட்டுள்ள நிலைமையை மஹிந்தானந்த அளுத்கமகே மீது சுமத்த முயற்சிக்கின்றனர். ஆனால் இது ஜனாதிபதியினதும், அரசாங்கத்தினதும் வேலையே. இதில் மஹிந்தானந்த அரசியலில் இருந்து ஒதுக்கும் நிலைமையே ஏற்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தில் விவசாயத்துறை அமைச்சருக்காக 24 பில்லியன் ரூபாவே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இராஜாங்க அமைச்சருக்கு அவர் ராஜபக்ஷ என்பதனாலா என்று தெரியவில்லை அவருக்கு 45.8 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சேதனப் பயிர்ச் செய்கைக்காக 35,000 பில்லியன் ரூபாவை ஒதுக்குவதாக கூறிய போதும், வரவு செலவுத் திட்டத்தில் அதனைக் காணவில்லை. சேதன விவசாயகத்திற்காக விவசாயிகளுக்கு 6 இலட்சம் ரூபாவை கொடுக்கும் அதேவேளை மற்றைய பக்கத்தில் இரசாயன உரத்தை கொண்டு வர திட்டமிடுகின்றனர்.
அப்படியாயின் சேதனப் பயிர்ச் செய்கைக்காக வழங்கப்பட்ட நிதிக்கு என்ன ஆனது. இதில் குழுவொன்று இலாபம் அடைந்துள்ளது. அதாவது இது சால்வை போசனை அடையும் வரவு செலவாகவே உள்ளது. இதில் மூலம் சேதனப் பசளை நாடகமே நடந்துள்ளது.
தேயிலை, கருவா, நெல், சோளம் உள்ளிட்ட அனைத்து பயிர் செய்கைகளும் வீழ்ச்சியடைந்துள்ளன. சோளம் வீழ்ச்சியால் கோழித்தீனிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு முட்டை விலையும் அதிகரிக்கின்றது. இந்த நிலைமையில் சேதனப் பசளைக்கு போவதாக கூறிக்கொண்டு சேர் அனைத்திலும் தோல்வியடைந்துள்ளார்.
சாதாரணமாக அரசை செய்யும் போது, வரலாற்றுக் காலத்தில் அரசர்களுக்கு மந்திராலோசகர்கள் இருப்பவர். அவர்கள் படித்த, அறிவார்ந்தவர்களாக இருப்பர். ஆனால் அதேபோன்று இப்போது, கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அருகில் இருந்துகொண்டு ஆலோசனை வழங்குபவராக மகிந்தானந்த அளுத்கமகேவும், மகிந்த ராஜபக்ஷவுக்கு அருகில் இருந்து ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவும், பஸில் ராஜபக்ஷவிடம் ரோஹித அபேகுணவர்தனவும் இருக்கின்றனர். இவர்கள் மூவருமே அவர்களுக்காக முன்னிற்பவர்கள். அவர்கள் கூறுவதை அப்படியே கூறுகின்றனர். இதன் மூலம் இந்த நாடு எங்கே போகின்றது என்று தெரியவில்லை என்றார்.
No comments:
Post a Comment