ஆங்கிலக் கால்வாயை கடப்போரை மீள அழைக்குமாறு பிரிட்டிஷ் பிரதமர் அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, November 27, 2021

ஆங்கிலக் கால்வாயை கடப்போரை மீள அழைக்குமாறு பிரிட்டிஷ் பிரதமர் அறிவிப்பு

பிரிட்டிஷ் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் அனைத்துக் குடியேறிகளையும் பிரான்ஸ் திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.

இங்கிலாந்துக்குச் செல்வதற்காகக் கால்வாயைக் கடக்க முயன்ற 27 குடியேறிகள் மூழ்கியதைத் தொடர்ந்து அவர் அவ்வாறு கூறினார்.

அந்தச் சம்பவம் தொடர்பாகச் சந்தேகத்துக்குரிய 5 ஆட்கடத்தல் காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் கால்வாயைக் கடப்போர் மீண்டும் பிரான்ஸுக்குத் திரும்ப, அதனுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள ஜோன்சன் பரிந்துரைக்கிறார்.

இந்நிலையில், ஆங்கிலக் கால்வாய் ஒரு மயானமாக மாற அனுமதிக்கப் போவதில்லை என்று பிரான்ஸ் பிரதமர் இமானுவல் மக்ரோன் சூளுரைத்துள்ளார்.

கால்வாயில் மனிதக் கடத்தல் சம்பவங்களை முடிவுக்குக் கொண்டுவர, ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து ஒருங்கிணைந்த அணுகுமுறையை இரு நாட்டுத் தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் குடியேறிகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டைக் காட்டிலும் இவ்வாண்டு மும்மடங்கு அதிகரித்துள்ளது.

இந்த பிரச்சினை பற்றி பேச பிரிட்டன் உள்துறை செயலாளர் பிரீதி படேல நாளை ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் உள்துறை அமைச்சர் கெரால்ட் டார்மனினை சந்திக்கவுள்ளார்.

ஆங்கிலக் கால்வாயில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற விபத்து அந்த கால்வாயில் இடம்பெற்ற மோசமான விபத்தாக உள்ளது. இதில் ஒரு கரப்பிணி உட்பட ஏழு பெண்கள், மூன்று சிறுவர்கள் மற்றும் 17 ஆண்கள் உயிரிழந்தனர்.

No comments:

Post a Comment