(எம்.மனோசித்ரா)
வரவு செலவு திட்டம் என்பது இரகசியமானதொரு விடயமாகும். அதனை சமர்ப்பிக்க முன்னர் அதனூடாக முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்களை பகிரங்கப்படுத்த முடியாது. எனவே தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்மானங்களை ஏற்றுக் கொண்டு சேவைக்கு திரும்புமாறு அதிபர், ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், நிதி அமைச்சருடனான சந்திப்பின் போது வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை என்ன என்பது பற்றி அறிந்து கொள்வது அதிபர், ஆசிரியர் சங்கங்களின் எதிர்பார்ப்பாகக் காணப்பட்டால் அதனை அறிவிக்க முடியும். அது குறித்து எனக்கும் தெரியாது. எனவே பாராளுமன்றத்தில் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும் வரை காத்திருக்குமாறு கோருகின்றோம்.
மாணவர்களுக்கு கற்பித்தலில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கான 5,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எனவே தீர்மானங்களை ஏற்றுக் கொண்டு வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும் வரை சேவைக்கு திரும்புமாறு கோருகின்றோம். அவ்வாறு சேவைக்கு திரும்பும் பட்சத்தில் அதிபர், ஆசிரியர்கள் மீதான சமூகத்தின் மதிப்பு மேலும் உயர்வடையும் என்றார்.
No comments:
Post a Comment