டெல்டா தொற்று ஏற்பட்டால் எந்த அறிகுறிகளும் இல்லாமல் இருதய நோய் ஏற்பட அதிக வாய்ப்பு - வைத்திய நிபுணர் கோட்டாபய ரணசிங்க - News View

About Us

About Us

Breaking

Friday, August 27, 2021

டெல்டா தொற்று ஏற்பட்டால் எந்த அறிகுறிகளும் இல்லாமல் இருதய நோய் ஏற்பட அதிக வாய்ப்பு - வைத்திய நிபுணர் கோட்டாபய ரணசிங்க

(எம்.ஆர்.எம்.வசீம்)

கொவிட் டெல்டா வைரஸ் தொற்றுக்குள்ளாகி எந்த நோய் அறிகுறிகளும் வெளிப்படுத்தாமலே இருதய நோய்களுக்கு ஆளாகுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கின்றது. அவ்வாறான கொவிட் தொற்றுக்குள்ளான இருபது நோயாளர்களுக்கு கடந்த வாரங்களில் சத்திர சிகிச்சை மேற்கொண்டோம் என கொழும்பு தேசிய வைத்தியசாலை மார்பக சிகிச்சை பிரிவு விசேட வைத்திய நிபுணர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்தார்.

கொவிட் டெல்டா வைரஸ் தொற்றின் பாதிப்பு குறித்து தெளிவுபடுத்துகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இருதய நோய்களுக்கு ஆளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் அதிகமானவர்கள் குறைந்த வயதினர்கள். பொதுவாக இருதய நோய்க்கு காரணமாக அமையும் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ராேல், நீரிழிவு போன்ற நோய்களுக்கு ஆளாகாமல், இருதய நோய்க்கு ஆளாகியவர்களாகும்.

அதனால் இவ்வாறான இருதய நோய் அறிகுறிகள் யாருக்காவது வெளிப்பட்டால், அவர்களை விரைவாக வைத்தியசாலைக்கு அனுமதிப்பது நல்லது.

அத்துடன் கொவிட் டெல்டா வைரஸ் தொற்றுக்குள்ளாகி, இருதய நோய்க்கு ஆளாகும் நோயாளர்கள் தொடர்பில் விசேட ஆய்வொன்றை தற்போது நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment