சுகாதார அறிவைக் கொண்டிராத நபர்கள் கொவிட் தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் - வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் - News View

About Us

About Us

Breaking

Friday, August 27, 2021

சுகாதார அறிவைக் கொண்டிராத நபர்கள் கொவிட் தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் - வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம்

(எம்.மனோசித்ரா)

சுகாதாரம் சார்ந்த தொழிநுட்ப அறிவைக் கொண்டிராத நபர்கள் கொவிட் முகாமைத்துவத்தை பாதிக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

இவ்வாறு எழுமாற்றாக கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருப்பதால் மக்களின் ஒத்துழைப்பும் கிடைக்கப் பெறாது. மக்களின் நடமாட்டம் அதிகரித்து முடக்கத்தால் எதிர்பார்த்த பிரதிபலனையும் பெற முடியாமல் போகும்.

இவ்வாறான கருத்துக்கள் வெளியிடப்படும் போது மக்கள் சுகாதார விதிமுறைகளைக் கடைபிடிக்காமல் அசமந்த போக்குடன் செயற்படக் கூடும். மக்கள் இவ்வாறு செயற்பட ஆரம்பித்தால் அது கொவிட் தொற்றின் முகாமைத்துவத்தில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும்.

இவ்வாறான ஒத்துழைப்புக்கள் இன்றி எம்மால் பயணக் கட்டுப்பாடுகளை சரியான முறையில் முகாமைத்துவம் செய்ய முடியாது. எனவே பயணக் கட்டுப்பாடுகள் மேலும் இறுக்கப்படுத்தப்பட வேண்டும் என்றும் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் சுட்டிக்காட்டினார்.

கொவிட் தொற்று என்பது ஒரு சாதாரண காய்ச்சல் மாத்திரமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை மக்களை தவறான முறையில் வழிநடத்தக் கூடுமல்லவா என்பது தொடர்பில் வினவிய போதே வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் இவ்வாறு தெரிவித்தார்.

No comments:

Post a Comment