கொரோனாவுக்கு இலங்கையில் இதுவரை 27 பொலிஸார் பலி - News View

Breaking

Friday, August 27, 2021

கொரோனாவுக்கு இலங்கையில் இதுவரை 27 பொலிஸார் பலி

(எம்.எப்.எம்.பஸீர்)

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 27 பொலிஸார் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களில் 10 பேர் இம்மாதத்தில் மட்டும் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

இவ்வாறு உயிரிழந்த பொலிஸாரில் பெரும்பாலனவர்கள், கொவிட் நிமோனியா நிலைமை காரணமாக உயிரிழந்துள்ளதாக அந்த தகவல்கள் குறிப்பிட்டன.

இம்மாதம் முதலாம் திகதி முதல் இன்று வரையிலான காலப்பகுதியில் (27 வரை) 10 பொலிசார் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், அவர்கள் கித்துல்கல, கலஹா, தெமட்டகொடை, காலி, முகத்துவாரம், உடுகம, அம்பன்பொல, தேசிய பொலிஸ் கல்லூரி, மட்டக்களப்பு மற்றும் கேகாலை ஆகிய பொலிஸ் நிலையங்களில் சேவையாற்றியவ்ர்களே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர்.

No comments:

Post a Comment