விழிப்புடனும் முன் மாதிரியாகவும் வீடுகளிலேயே பெருநாளை எதிர்கொள்வோம்...! சர்வ வல்லமை பொருந்திய அல்லாஹ் எம் அனைவர்கள் மீதும் அருள் புரிந்திடுவானாக - செய்யித் அலி ஸாஹிர் மௌலானா - News View

About Us

About Us

Breaking

Thursday, May 13, 2021

விழிப்புடனும் முன் மாதிரியாகவும் வீடுகளிலேயே பெருநாளை எதிர்கொள்வோம்...! சர்வ வல்லமை பொருந்திய அல்லாஹ் எம் அனைவர்கள் மீதும் அருள் புரிந்திடுவானாக - செய்யித் அலி ஸாஹிர் மௌலானா

இப்புனித ரமழான் மாதத்தில், இறைவனில் முழு விசுவாசம் கொண்டவர்களான நாங்கள், இறை அச்சத்துடன் வழிபட்டு நோன்பின் மாண்புகளை பின்பற்றி இம்மையிலும், மறுமையிலும் இறை அருளுடனான பாக்கியங்களை நாடியவர்களாக மேற்கொண்ட ஆத்மீக செயற்பாடுகளின் உச்சக்கட்ட அடைவாக இறைவனின் அங்கீகாரத்துக்காக பிரார்த்தனைகளுடனும், இந்த சிறப்புமிகு ரமழானின் இறுதியிலே இப்போது இருந்து கொண்டிருக்கிறோம்.

பொதுவாக, ஈகைத் திருநாள், “ஈதுல்-பித்ர்” என்பது அர்ப்பனிப்புடன் கூடிய கொடைகளினூடாக அனைவரையும் சந்தோசப்படுத்துவதால், இறை திருப்தியை பெற வேண்டுமென்ற எண்ணத்துடனும் புனித ரமழானின் ஆத்மீக வெளிப்பாட்டினூடாகவும் ஏனையவர்களும் அவர்களது இல்லங்களிலே சந்தோசமாக உண்டு, உடுத்து இப்பெருநாள் தினத்தை மகிழ்வுடன் கொண்டாடிட உதவுவது எங்களது கடமையாக வழமையாக கடைப்பிடித்து வந்திருக்கிறோம்.

இம்முறையும் ஈதுல் பித்ரை அனுஷ்டிக்கும் போது தற்போது நாம் முகம் கொடுக்கின்ற அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு அனைவரினதும் சந்தோசமான சேமநலன்களை பேனுவதைத்தான் இந்த ஈதுல்-பித்ரின் ஊடாக முன்னுரிமைபடுத்தப்பட வேண்டுமென்பதை உணர்வுபூர்வமாக பிரகடனப்படுத்த கிடைத்திருக்கின்ற ஓர் அரிய சந்தர்ப்பமாகும்.

கடந்த வருடத்திலிருந்து முழு உலகும் முகம் கொடுக்கின்ற கொடூர கொரோனாவின் தாக்கம் கூடிக்கொண்டிருக்கின்ற இந்த அசாதாரண சூழ்நிலையிலே இந்த தொற்றை கட்டுப்படுத்திட மிகவும் முன்மாதிரியாக, பொறுப்புடனும் விழிப்புடனும் எமது முஸ்லிம் சமூகம் நடந்து கொள்வதற்க்கு கிடைத்திருக்கின்ற ஒரு வாய்ப்பாக இந்த அசாதரண சூழ்நிலையில் எங்களது குடும்பங்களுடன் அவரவர் இல்லங்களிலேயே ஈகைத்திருநாளை கழிப்பது பாரியதொரு தொண்டாகவும் எங்களது குடும்பங்களின், எங்களது நண்பர்களின், எங்களது அயலவர்களின், ஒட்டு மொத்தமாக பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நாங்கள் ஆற்றுகின்ற அளப்பரிய சேவையுமாகும்.

இந்த வேளையிலே புனித குர்ஆன் வசனம் ஒன்றினை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.

“எவனொருவன் ஒரு மனிதனின் உயிரை பாதுகாக்கின்றானோ, அவன் முழு மனித சமுதாயத்தையும் பாதுகாத்தவனாகக் கருதப்படுவான்”.

இவ்வாறான இறை போதனைகளை பின்பற்றுவதை உண்மையான முஸ்லிம்கள் அறிவுபூர்வமாக உணர வேண்டும், நாம் அனைவரும் எமது வீடுகளிலேயே ஈகைத் திருநாளை பொறுப்புணர்வுடன் அனுஷ்டிப்போம். இன்ஷா அல்லாஹ்!

இதன் மூலமாக இந்தக் கொடிய கொரோனா பரவாமல் தடுத்து, பல உயிர்களை பாதுகாத்திட முற்படுவோம், இவ்வாறு நாங்கள் மற்றவர்களின் சேம நலன்களைப் பேணிப் பாது காப்பதில் எந்த அளவு கரிசனை எடுத்து பொறுப்புணர்வுடனும், மனிதாபிமானத்தோடும் எமது ஈகைத் திருநாளுக்குரிய மகிமையை நடைமுறை படுத்துவதுதான் உண்மையான ஈதுல்பித்ர் ஆகும்.

இதுவேதான் நாங்கள் அளிக்கின்ற ஓர் அற்புதமான பெறுமதிமிக்க பெருநாள் பரிசும் ஆகும்.

அனைவரது ஆரோக்கியத்திற்காகவும் உலகளாவ அல்லல்படுகின்ற பலஸ்தீன் உட்பட்ட அத்தனை சொந்தங்களது மீட்சிக்காகவும் இந்த நாட்களிலே அதிகம் அதிகம் பிரார்த்திப்போம்.

உங்களுக்கும், உங்கள் ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களுக்கும் மற்றும் ஏனைய உறவுகள் அனைவருக்கும் எனதும் எனது குடும்பத்தினரதும் மனமார்ந்த நோன்ப் பெருநாள், ஈதுல்பித்ர் வாழ்த்துக்கள். ! 

ஈத் முபாரக் !
செய்யித் அலி ஸாஹிர் மௌலானா

No comments:

Post a Comment