புனித ரமழான் மாதம் எம்மைப் பிரிந்து சென்றாலும், இந்த மாதத்தால் எமக்கு கிடைத்த பயிற்சிகள் நேரிய நோக்கில் முஸ்லிம்களை வழிநடாத்தும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளதோடு எம் அனைவரின் அமல்கலை இறைவன் பொருந்திகொள்ள வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்.
அவர் தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஒரு மாதம் நோன்பிருந்த நமக்கு "அல்லாஹ்" அருள்பாலிப்பானாக. உறவுகள், சொந்தபந்தங்களுடன் அன்பாகப் பழகும் நாள்தான் இன்றைய பெருநாள்.
எனினும் கொரோணாச் சூழல், நமது அன்புகள் ஒன்றிப்பதையும், இரண்டறக் கலப்பதையும் தடுத்திருக்கும் நிலையில் பெருநாளைக் கொண்டாட நேரிட்டுள்ளது. இதுவும் அல்லாஹ்வின் ஏற்பாடுதான் என்றே நாம் நம்புகிறோம். இந்தக் கொடிய நோய், நீங்குவதற்காக புனித ரமழானில் நாம் செய்த பிரார்த்தனைகள் வீண்போகாது.
No comments:
Post a Comment