இஸ்ரேலின் அடாவடித்தனம் பற்றி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, May 13, 2021

இஸ்ரேலின் அடாவடித்தனம் பற்றி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவிப்பு

“இஸ்ரேலுக்கு தற்காத்துக் கொள்வதற்கான உரிமை உண்டு” என கிளிப்பிள்ளைப் போன்று அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்திருக்கின்றார். அத்துடன் “இந்தப் பிரச்சினை விரைவிலோ அல்லது பின்னரோ தீரும்” எனவும் தெளிவில்லாமல் எதையோ உளறியிருக்கின்றார். சுதந்திரமான உலக நாடொன்றின் தலைவர் இவ்வாறு பரிதாபமான தொனியில் முணுமுணுப்பார் என நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. இனரீதியான ஒதுக்களைக் கடைப்பிடித்துவரும் இஸ்ரேல் அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற உதவிகளை வழங்குவதை நிறுத்துங்கள்.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு பெரும்பாலும் தூண்டப்படாமலேயே தங்குதடையின்றித் தொடர்கின்றது. ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெரூஸலத்தில் மனிதப் படுகொலையை நிறுத்த ஐ.நா. சபையும், இஸ்லாமிய நாடுகளின் ஒன்றியமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இஸ்ரேலின் மிலேச்சத்தனத்தை திசைத்திருப்புவதற்காக ஹமாஸ் மீது பாரபட்சமான முறையில் பழி சுமத்துவதை ஐக்கிய இராச்சியத்திற்கான பலஸ்தீனத் தூதுவர் தோலுரித்துக் காட்டியுள்ளார். "நோயின் அறிகுறிகளைத் தேடுகின்றீர்களே தவிர, நோய் எங்கேயிருக்கின்றது என்பதைக் காண்கிறீர்கள் இல்லை" என்கிறார் அவர்.

No comments:

Post a Comment