இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெரும் உயர்வைத் தடுக்கும் முயற்சிகளில் அடுத்த மூன்று வாரங்கள் முக்கியமானதாக இருப்பதால், அடுத்த சில நாட்களில், குறிப்பாக வரவிருக்கும் வார இறுதியில் பயணங்களை இரத்து செய்யுமாறு இராணுவத் தளபதி வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஏழு முதல் பத்து நாட்களில் பொதுமக்களின் செயற்பாடு காரணமாக கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் இராணுவத் தளபதியும், கொவிட் தடுப்பு செயற்பாட்டுக் குழுவின் தலைவருமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
எனவே எதிர்வரும் மூன்று வாரங்கள் முதல் ஒரு மாதம் வரை முக்கியமானதாக இருப்பதானல் சுற்றுலா பயணங்கள் உள்ளிட்ட அநாவசிய பயணங்களை தவிர்க்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதேவேளை சுகாதார வழிகாட்டுதல்களை அவசியம் அமுல்படுத்த சுகாதார அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
இதனிடையே சுகாதார வழிகாட்டல்களை மீறுவோருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கவும் சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ஆரோக்கியத்தை மீறும் எவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment