எதிர்க்கட்சியினர் சபைக்குள் கொண்டுவர முயன்ற ஆபத்தான பொருட்கள் தொடர்பில் தீவிர விசாரணை நடத்த சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன கோரினார்.
எதிர்க்கட்சியினர் சபைக்குள் கொண்டுவர முயன்ற பல பொருட்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் ஆபத்தான பொருட்களும் உள்ளன. இதனால் சபையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த விடயம் தொடர்பில் தீவிர விசாரணை நடத்த சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சர்ச்சையின் போது குழப்ப நிலை ஏற்பட்டது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் எதிர்க்கட்சி எம்.பியான ஹெக்டர் அப்புகாமி கூறுகையில் நாம் ஆர்ப்பாட்டத்துக்கு கொண்டு வந்த பொருட்களை பொலிஸார் பறித்தார்கள். அரச தரப்பினர் கொண்டு வந்த சஹ்ரானின் படம் உள்ளிட்ட பதாகைகளை ஏன் பறிக்கவில்லை? எனவே இது தொடர்பிலும் சபாநாயகர் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றார்.
இந்நிலையில் மீண்டும் இரு தரப்பினருக்கிடையே தர்க்கம் ஏற்பட்டது.
ஷம்ஸ் பாஹிம், நிசாந்தன் சுப்பிரமணியம்
No comments:
Post a Comment