உலகின் 80 வீத நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு அமெரிக்கா அறிவுறுத்தல் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 21, 2021

உலகின் 80 வீத நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு அமெரிக்கா அறிவுறுத்தல்

கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தல் காரணமாக உலகெங்கும் 80 வீதமான நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்ப்பதற்கு அமெரிக்க மக்களை அந்நாட்டு இராஜாங்கத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

பயண வழிகாட்டல் தொடர்பில் அந்தத் திணைக்களம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், பெரும் தொற்று தொடர்வதால் பயணிகள் முன்னெப்போதும் சந்தித்திராத அச்சுறுத்தலை எதிர்கொள்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

200 நாடுகளில் 34 நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா தொற்றினால் தற்போது உலகெங்கும் மூன்று மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதோடு அவர்களில் அரை மில்லியனுக்கும் அதிகமானவர்கள் அமெரிக்கராவர்.

உலகெங்கும் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டபோதும் உலகில் நோய்த்தொற்று வேகம் அதிகரித்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. 

இந்நிலையில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்ட வழிகாட்டலில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் குறைந்த நாடுகள் பட்டியலில் மகாவு, தாய்வான் மற்றும் நியூசிலாந்து ஆகிய மூன்று நாடுகள் மாத்திரமே உள்ளன.

No comments:

Post a Comment