வவுனியாவில் திருமணத்திற்கு சேர்த்து வைக்கப்பட்ட தங்க நகைகள் கொள்ளை - திருடர்கள் தப்பி ஓட்டம், நெருங்கிப்பழகியவர்களாக இருக்கலாம் என சந்தேகம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 21, 2021

வவுனியாவில் திருமணத்திற்கு சேர்த்து வைக்கப்பட்ட தங்க நகைகள் கொள்ளை - திருடர்கள் தப்பி ஓட்டம், நெருங்கிப்பழகியவர்களாக இருக்கலாம் என சந்தேகம்

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிலுள்ள இளமருதங்குளம் பகுதியில் இன்று நண்பகல் வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் திருமணத்திற்காக சேர்த்து வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர் .

இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று (21) பிற்பகல் இளமருதங்குளம் ஆலயத்திற்கு அருகிலுள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்த திருடர்கள் வீட்டில் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். வீட்டிலுள்ளவர்கள் கிராம அலுவலகத்திற்கு சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டின் உரிமையாளரின் மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு அடுத்த மாதம் திருணமத்திற்காக சேர்த்து வைக்கப்பட்ட தாயின் தாலிக் கொடி, மோதிரம், காப்பு என்பன மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைக்கப்பட்ட தங்க நகைகளுடன் சிமாட் போன், சிறிய தொகைப் பணம் போன்றவற்றை வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் கொள்ளயிட்டு சென்றுள்ளனர்.

கிராம அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு திரும்பியபோது வீட்டின் பின் கதவு திறக்கப்பட்டிருந்ததுடன் அங்கிருந்து திருடன் ஒருவர் தப்பி ஓடுவதையும் அவதானித்தவர்கள் அயலவர்களின் உதவியை நாடியுள்ளனர் .

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து கைரேகை நிபுணர்கள், மோப்ப நாயுடன் சென்ற பொலிசார் திருடன் தப்பிச் சென்ற வழிகளை இனங்காட்டிய மோப்ப நாய் வீட்டிற்குப் பின்புறமாக உள்ள குளத்திற்கு அருகில் படுத்துக் கொண்டது எனினும் திருடனின் செருப்பு அங்கு காணப்பட்டுள்ளதை அடுத்து ஓமந்தை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் இவர்களுடன் நெருங்கிப்பழகியவர்களாக இருக்கலாம் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதுடன் இளமருதங்குளம் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களின் இச்சம்பவம் இரண்டாவது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment