வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் 13 பேருக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 21, 2021

வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் 13 பேருக்கு கொரோனா

வவுனியாவில் 13 பேருக்கு கொரோனா தொற்று இருக்கின்றமை இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 13 பேருக்கே இவ்வாறு தொற்று இருக்கின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படுபவர்கள் மற்றும் தென்பகுதிகளை சேர்ந்த பலர் வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பலருக்கு நேற்று பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்ததுடன் யாழ் ஆய்வுகூடத்தில் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அவர்களில் 13 பேருக்கு தொற்று இருக்கின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment