ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு - கொழும்பு நெடுஞ்சாலையின் மாவடிவெம்பு பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே பலியானதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை 31.01.2021 இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் செங்கலடியில் வசிக்கும் இராமகிருஷ்ணன் மயூரன் (வயது 27) என்பவரே பலியாகியுள்ளார்.
இந்த இளைஞன் சந்திவெளியிலிருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருக்கும்போது மாவடிவேம்பு பகுதியில் வைத்து எதிரே வந்த இன்னொரு மோட்டார் சைக்கிளில் மோதுண்டதால் படுகாயங்களுக்குள்ளான நிலையில் ஸ்தலத்திலேயே இறந்துள்ளார்.
மாவடிவெம்பு பிரதேச வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து உடற்கூராய்வுப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நண்பர்களின் ஒன்றுகூடலில் கலந்துவிட்டு திரும்பும் வழியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சந்திவெளியில் நண்பர்களுக்கிடையில் இடம்பெற்ற ஒன்று கூடலுக்காகவே அவர் சென்றிருந்ததாகவும் ஒன்றுகூடலின்போது நண்பர்களுக்கிடையில் மதுவும் பரிமாறப்பட்டிருப்பது தெரியவந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment