யேமனின் மனிதாபிமான நெருக்கடிக்கு பதிலளிக்கும் விதமாக ஹவுத்தி இயக்கத்தின் பயங்கரவாத பெயரை இரத்து செய்ய அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது.
ஹவுத்தி இயக்கத்தை ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக பெயரிட்ட டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் முடிவுகள் மாற்றியமைக்கப்படுகிறது.
சவுதி அரேபியாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பினாமி மோதலாக பரவலாகக் காணப்படும் யேமனில் சவுதி அரேபியா தலைமையிலான இராணுவப் பிரச்சாரத்திற்கு அமெரிக்காவின் ஆதரவை நிறுத்துவதாக ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்த ஒரு நாள் கழித்து, வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
சவுதி அரேபியா தலைமையிலான இராணுவக் கூட்டணி 2015 இல் யேமனில் தலையிட்டு, ஹவுத்தி குழுவை எதிர்த்துப் போராடும் அரசாங்கப் படைகளுக்கு ஆதரவளித்தது.
பொருளாதார மற்றும் நாணய சரிவு மற்றும் கொவிட்-19 தொற்று நோயால் நாட்டின் நெருக்கடிகள் மோசமடைந்து வருவதால் ஐ.நா. அதிகாரிகள் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சமாதான பேச்சுவார்த்தைகளை புதுப்பிக்க முயற்சிக்கின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபை யேமனை உலகின் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடி மிக்க நாடு என்று விவரிக்கிறது.
அங்கு 80 சதவீத மக்களுக்கு உதவி தேவைப்படுகிறது. மில்லியன் கணக்கான மக்கள் பஞ்சத்தை எதிர்கொண்டு வருவதாகவும், உதவி வழங்க அதிக பணம் தேவைப்படுவதாகவும் ஐ.நா. உயர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அன்சார் அல்லாஹ் என்றும் அழைக்கப்படும் ஹவுதி குழு, வடக்கு யேமனில் உள்ள உண்மையான அதிகாரமாகும், மேலும் உதவி வழங்க தொண்டு நிறுவனங்கள் அதனுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள சனா விமான நிலையம் மற்றும் ஹோடைடா துறைமுகம் வழியாக உதவித் தொழிலாளர்கள் மற்றும் பொருட்கள் வருகின்றமையும் குறிப்பிடத்கத்கது.
No comments:
Post a Comment