பல தடைகளை உடைத்து ஐந்தாம் நாளான இன்று தனது இலக்கை அடைந்தது பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அகிம்சை வழிப் பேரணி.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அகிம்சை வழி பேரணியைத் தடுக்க யாழ். மந்திகை மடத்தடியில் வீதி மறியல் செய்து பொலிஸார் தடை ஏற்படுத்திய போதும் மக்கள் எழுச்சி பேரணி அதனை உடைத்து முன்னேறி இன்று மாலை தனது இலக்கான பொலிகண்டியை அடைந்தது.
பருத்தித்துறை நோக்கிப் பயணிக்கும் பேரணியை மந்திகை மடத்தடியில் வீதியின் குறுக்கே நின்று பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவை வைத்து தடுக்க முயன்றனர்.
பேரணியில் கலந்து கொண்டோரை பதிவு செய்தே அனுமதிக்க முடியும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். எனினும் பெரும் திரளான மக்கள் எதிர்ப்பை வெளியிட்டதால் பொலிஸார் குறித்த இடத்தில் இருந்து விலகிச் சென்றனர்.
பருத்தித்துறை செல்லும் பேரணி அங்கிருந்து வல்வெட்டித்துறை சென்று பொலிகண்டி என்ற இலக்கை இன்று மாலை சென்றடைந்தது.
அங்கு பேரணியில் பங்கேற்கும் பல்லாயிரக் கணக்கானோர் ஒரே குரலில் வாழ்வுரிமையை வலியுறுத்தி சர்வதேசத்திடம் நீதி கோரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment