அனைவரும் ஐக்கிய தேசிய கட்சியாக ஒன்றுபட்டு, எமது யானையை மீண்டும் தூக்கி நிறுத்த வேண்டும் : ருவன் விஜேவர்த்தன - News View

About Us

About Us

Breaking

Sunday, February 7, 2021

அனைவரும் ஐக்கிய தேசிய கட்சியாக ஒன்றுபட்டு, எமது யானையை மீண்டும் தூக்கி நிறுத்த வேண்டும் : ருவன் விஜேவர்த்தன

(எம்.ஆர்.எம்.வசீம்)

அடுத்து வரும் பிரதான தேர்தல்களுக்கு முகம்கொடுக்கும் வகையில் ஐக்கிய தேசிய கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும். கட்சியை பலப்படுத்துவதன் மூலம் மாத்திரமே அரசாங்கத்துக்கு சவாலை ஏற்படுத்த முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கம் கொண்டு செல்லும் வேலைத்திட்டங்கள் அனைத்தும் தோல்வியிலே செல்கின்றன. மக்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக பாரியளவில் கஷ்டப்படுகின்றனர். அத்தியாவசிய பொருட்களின் விலை பாரியளவில் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. மக்கள் எதிர்கொண்டுள்ள இந்த பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் எந்த தீர்வும் இல்லை. அரசாங்கத்தின் மீது மக்கள் விரக்தியடைந்திருக்கின்றனர்.

அத்துடன் நாட்டின் பிரதான கட்சியான ஐக்கிய தேசிய கட்சி நாட்டுக்காக பாரிய வேலைத்திட்டங்களை மேற்கொண்டிருக்கின்றன. நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நிலையில் இருந்து மீட்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியினால் முடியும். அதற்காக ஐக்கிய தேசிய கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப நாங்கள் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும். 

எம்முடன் இருந்து பிரிந்து சென்றிருப்பவர்களுடன் இணைந்து செயற்படுவதாக இருந்தாலும் அல்லது வேறு கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதாக இருந்தாலும் ஆரம்பாக எமது கட்சியை நாங்கள் பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும், அடுத்து வரும் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலின் போது அரசாங்கத்துக்கு பெரும் சவாலை ஏற்படுத்த எமக்கு பொதுவான அரசியல் தளம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகள் அனைத்தும் பொதுவான இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும்.

அதனால் நாங்கள் அனைவரும் ஐக்கிய தேசிய கட்சியாக ஒன்றுபட்டு செயற்பட்டு, எமது யானையை மீண்டும் தூக்கி நிறுத்த வேண்டும். கட்சியை பலப்படுத்துவதன் மூலமே அதற்கான சிறந்த தலைமைத்துவத்தை வழங்க முடியும் என்றார்

No comments:

Post a Comment