இலங்கையின் 73 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அனைத்து வீடுகள், வர்த்தக நிலையங்கள் உட்பட அரச மற்றும் தனியார் நிறுவனங்களிலும் மற்றும் வாகனங்களிலும் தேசியக் கொடியை பறக்கவிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அரச பாதுகாப்பு உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.
பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவையொட்டி இன்று 1ஆம் திகதி தொடக்கம் 7 ஆம் திகதி வரையில் இவ்வாறு தேசியக் கொடியை காட்சிப்படுத்துமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
73 ஆவது சுதந்திரதின கொண்டாட்ட நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி சுதந்திர சதுக்க வளாகத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment