வியட்நாம் தனது 76 வயதான தலைவரை மீண்டும் ஐந்தாண்டு காலத்திற்கு தேர்ந்தெடுத்தது - News View

About Us

About Us

Breaking

Monday, February 1, 2021

வியட்நாம் தனது 76 வயதான தலைவரை மீண்டும் ஐந்தாண்டு காலத்திற்கு தேர்ந்தெடுத்தது

வியட்நாமின் ஆளும் சமுதாயக் கட்சி தனது 76 வயதான தலைவரான நுயென் பு ட்ராங்கை, மூன்றாவது ஐந்தாண்டு காலத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளது.

65 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஓய்வு பெற வேண்டும் என்று கூறும் கட்சியின் கொள்கைகளுக்கு மத்தியில் ட்ராங்கிற்கு விதிவிலக்கு வழங்கப்பட்டது,

இந்த தெரிவின் மூலம் ட்ராங்கி, பல தசாப்தங்களாக நாட்டின் வலிமையான மற்றும் நீண்ட காலம் பணியாற்றிய தலைவர்களில் ஒருவராக மாறியுள்ளார்.

கொவிட்-19 க்கு எதிரான நாட்டின் பெருமளவில் வெற்றிகரமான போராட்டம் மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரம் ஆகியவற்றின் மத்தியில் அவரது தலைமை அடுத்த ஐந்து ஆண்டுகள் வரை இருக்கும்.

கட்சியின் பொதுச் செயலாளராக அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஹனோய் நகரில் நடந்த ஒரு கட்சி மாநாட்டில் வெளிவந்தது.

அங்கு வியட்நாம் முழுவதிலும் இருந்து 1,600 கட்சி பிரதிநிதிகள் கூட்டங்களை நடத்தினர். பெரும்பாலும் மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடைபெறும் கூட்டங்கள், வியட்நாமின் தற்போதைய பொருளாதார வெற்றியை மேம்படுத்துவதற்கும், கட்சியின் ஆட்சியின் நியாயத்தன்மையை மேம்படுத்துவதற்கும் ஒரு புதிய தலைமைக் குழுவைத் தேர்ந்தெடுப்பதாகும்.

வியட்நாமுக்கு ஒரு முக்கிய ஆட்சியாளர் இல்லாத நிலையில் அதிகாரப்பூர்வமாக நான்கு "தூண்கள்" அரசாங்கத்தை வழிநடத்துகிறார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் (மிக சக்தி வாய்ந்த பதவி), ஒரு ஜனாதிபதி, ஒரு பிரதமர் மற்றும் தேசிய சட்டமன்றத் தலைவர் ஆவர்.

No comments:

Post a Comment