பாகிஸ்தான் பிரதமரின் உரை இரத்து செய்யப்பட்டமை நாட்டுக்கு பாதக விளைவுகளை ஏற்படுத்தும் : பிமல் ரத்நாயக்க - News View

About Us

About Us

Breaking

Saturday, February 20, 2021

பாகிஸ்தான் பிரதமரின் உரை இரத்து செய்யப்பட்டமை நாட்டுக்கு பாதக விளைவுகளை ஏற்படுத்தும் : பிமல் ரத்நாயக்க

(நா.தனுஜா)

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பாராளுமன்ற உரை இரத்துச் செய்யப்பட்டமை இராஜதந்திர ரீதியில் நாட்டிற்கு பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டியிருக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, இராஜதந்திர தவறுகளை இழைப்பதில் கோத்தாபய ராஜபக்ஷ அரசாங்கம் நன்கு தேர்ச்சி பெற்றிருக்கிறது என்றும் சாடியிருக்கிறார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே பிமல் ரத்நாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது, இலங்கைப் பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உரையாற்றவிருந்த நிலையில், அது இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இது நாட்டிற்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும். 

இலங்கையின் நீண்ட கால நட்பு நாடாக பாகிஸ்தான் இருந்துவருகிறது. மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த சர்வதேசத் தொடர்புகள் என்பவை இராஜதந்திர ரீதியில் மிகவும் மதிப்பு வாய்ந்த சொத்துக்களாகும். அவற்றை ஆட்சியாளர்கள் சீர்குலைக்கக்கூடாது. 

எனினும் கோத்தாபய ராஜபக்ஷ அரசாங்கம் இராஜதந்திர தவறுகளை இழைப்பதில் நன்கு தேர்ச்சி பெற்றிருக்கின்றது.

No comments:

Post a Comment