ராமேஷ்வரனுடைய கருத்து எச்சரிக்கை மிக்கதாகும் - முஸ்லிம்களின் உரிமைகளை பெற்றுக் கொடுக்காத முதுகெழும்பற்ற அரசாங்கம் : வேலுகுமார் - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 24, 2021

ராமேஷ்வரனுடைய கருத்து எச்சரிக்கை மிக்கதாகும் - முஸ்லிம்களின் உரிமைகளை பெற்றுக் கொடுக்காத முதுகெழும்பற்ற அரசாங்கம் : வேலுகுமார்

(எம்.மனோசித்ரா)

அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் யாழ். தீவுகளைப் போன்று பெருந்தோட்டங்களையும் சீனாவிற்கு விற்பதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், அத்தியாவசிய பொருட்களின் விலை அன்றாடம் அதிகரித்துச் செல்கின்ற போதிலும், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பதில் பல நாடகங்கள் அரகேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இவ்வாறான நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் கடந்த வாரம் பெருந்தோட்டங்களை இந்தியாவிற்கோ சீனாவுக்கோ விற்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கவில்லை என்று கூறியிருந்தார்.

அதனை அடிப்படையாகக் கொண்டு அவதானிக்கும் போது அம்பாந்தோட்டை துறைமுகம், யாழ். தீவுகள் என்பவற்றைப் போன்றே பெருந்தோட்டங்களும் வெளிநாடுகளுக்கு விலை பேசப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

'சீனாவிற்கு மாத்திரமல்ல, இந்தியாவிற்கும் கம்பனிகளை விற்கும் நோக்கமில்லை.' என்று கூறுவதனூடாக பெருந்தோட்டங்கள் சீனாவிற்கு விலை பேசப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எந்தவொரு பின்னணியும் இல்லாமல் இவ்வாறானதொரு கருத்து முன்வைக்கப்பட்டிருக்காது. ராமேஷ்வரனுடைய கருத்து எச்சரிக்கை மிக்கதாகும். 

ஒரு பக்கம் சம்பள அதிகரிப்பு விவகாரத்தில் நெருக்கடிகளை சந்தித்துள்ள பெருந்தோட்ட தொழிலாளர், மறுபக்கம் ஜனாசா விகாரத்தில் முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தைக் கொண்டு அரசாங்கம் அரசியல் செய்து கொண்டிருக்கிறது.

ஜனாசா விவகாரத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அறிவிப்பையும் மீறி அடிப்படைவாத சக்திகள் அரசாங்கத்தை நிர்வகித்துக் கொண்டிருக்கின்றன.

முஸ்லிம் மக்களின் உரிமைகளை பெற்றுக் கொடுக்க முடியாத, முதுகெழும்பற்றதாக இந்த அரசாங்கம் இருக்கிறது. பாராளுமன்றத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் பலம் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது என்றார்.

No comments:

Post a Comment