டைனமைட், சேவா நூலுடன் வைத்தியர் உட்பட இருவர் கைது - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 24, 2021

டைனமைட், சேவா நூலுடன் வைத்தியர் உட்பட இருவர் கைது

திருகோணமலை, கிண்ணியா பிரதேசத்தில் டைனமைட் மற்றும் சேவா நூலுடன் ஆயுர்வேத வைத்தியர் உட்பட இருவரை கைது செய்ததாக தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 37 டைனமைட் குச்சுகளும் டைனமைட்டை வெடிக்க வைக்கும் 372 அடி சேவா நூலும் கைப்பற்றப்பட்டதாக தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். 

திருகோணமலை கடற்படையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்படி கைதை தலைதலைமையகப் பொலிஸார் மேற்கொண்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

அண்ணல் நகர், கிண்ணியா-3 பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதான ஆயுர்வேத வைத்தியரும், ஜாவா நகர், கிண்ணியா-6 ஜ சேர்ந்த 41 வயதான மீனவர் ஒருவருமே டைனமைட்டுடன் கைதானதாக தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட வெடி மருந்துகள் பயங்கரவாத செயற்பாட்டிற்காக கொள்வனவு செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்த தலைமையகப் பொலிஸார் இதன் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொள்வதாக தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களையும் கைப்பற்றப்பட்ட வெடி பொருட்களையும் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கையைகளை மேற்கொள்வதாக தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்

திருகோணமலை நிருபர் கீத்

No comments:

Post a Comment