இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு 312 முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Friday, February 19, 2021

இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு 312 முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை

(நா.தனுஜா)

இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு கடந்த 2020 ஆம் ஆண்டு 312 முறைப்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டு, நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, 207 முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட பத்திரிகை ஆசிரியர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி தீர்வளிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 76 முறைப்பாடுகள் தொடர்பில் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. 

அத்தோடு எஞ்சிய 29 முறைப்பாடுகள் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட ஆசிரியபீட ஒழுக்கக் கோவைக்கு முரணாகப் பிரசுரிக்கப்பட்ட செய்திகள் தொடர்பானவையாகும்.

இந்நிலையில் பொதுவாக நிர்ணயிக்கப்பட்ட ஆசிரியபீட ஒழுக்கக் கோவையைப் பின்பற்றுவதன் ஊடாக இத்தகைய முறைப்பாடுகளைத் தவிர்த்துக் கொள்வதை பெரிதும் ஊக்குவிப்பதாகவும் இலங்கைப் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கைப் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவிற்கு கிடைக்கப் பெறும் முறைப்பாடுகள் தொடர்பில் ஆராயும் குழுவானது 11 உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது. 

அதில் மேற்படி குழுவின் தலைவராக கடமையாற்றும் சட்டத்தரணியொருவர் உள்ளடங்கலாக ஊடகவியலாளர்கள் அல்லாத 6 பேர் அங்கம் வகிக்கின்றனர். குழுவில் அங்கம் வகிக்கும் ஏனைய ஐவரும் ஊடகவியலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment