(செ.தேன்மொழி)
மாகொல பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையின் சோதனை நடவடிக்கைகளின் போது ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் ஊடாக சேமிக்கப்பட்ட மூன்று இலட்சத்துக்கும் அதிகமான பணத்துடன் சந்தேக நபர்களிருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, மாகொல பகுதியில் நேற்று பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது போதைப் பொருள் மற்றும் பணத் தொகையுடன் சந்தேக நபர்களிருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த சந்தேக நபர்களை சோதனைக்குட்படுத்தியுள்ள விசேட அதிரடிப் படையினர், அவர்களிடமிருந்து ஒரு கிலோ 185 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் 3 இலட்சத்து 52 ஆயிரம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
தற்போது சிறை வைக்கப்பட்டுள்ள கைதியொருவரின் திட்டத்திற்கமையவே இந்த போதைப் பொருள் கடத்தல் செயற்பாடுகள் இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து சந்தேக நபர்களிருவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப் பொருள் பிரிவினருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப் பொருள் பிரிவினர் சந்தேக நபர்களை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி 7 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்த எதிர்பார்த்துள்ளதுடன், மேலும் விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment