மியன்மாரில் தொடரும் ராணுவ ஒடுக்குமுறை - போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி - News View

About Us

About Us

Breaking

Saturday, February 20, 2021

மியன்மாரில் தொடரும் ராணுவ ஒடுக்குமுறை - போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி

மியன்மாரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 பேர் கொல்லப்பட்டனர்.

மியன்மாரில் அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், கடந்த 1ம் திகதி ஆங் சான் சூகி தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்து, ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது. 

நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உட்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை ராணுவம் கைது செய்தது.

இதில் ஆங் சான் சூகி மீது, தகவல் தொடர்பு சாதனங்களை சட்ட விரோதமாக இறக்குமதி செய்து வைத்திருந்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

ராணுவ ஆட்சிக்கு எதிராகவும் ஆங்சான் சூகி உள்ளிட்ட தலைவர்களை உடனடியாக விடுவிக்க கோரியும் மியான்மார் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். 

தலைநகர் நேபிடா, யாங்கூன் மற்றும் மண்டலே நகரங்களில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பொது இடங்களில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கு ராணுவம் விதித்துள்ள தடையை மீறி இந்தப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.‌ 

போராட்டத்தை ஒடுக்குவதற்கு ராணுவம் அடக்குமுறையை கையாண்டு வந்தாலும் நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில், மண்டலே நகரில் உள்ள கப்பல் தளத்தில் உள்ள ஏராளமான தொழிலாளர்கள் பணிகளை புறக்கணித்து இன்று ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அவர்களை பணிக்கு திரும்பும்படி அதிகாரிகள் கூறினர். ஆனால், தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அவர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். துப்பாக்கி சூடும் நடத்தினர். இதில் 2 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

No comments:

Post a Comment