ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றவுள்ள தீர்மானத்தின் முதலாவது வரைபில் திருப்தி இல்லை - கஜேந்திரகுமார் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 20, 2021

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றவுள்ள தீர்மானத்தின் முதலாவது வரைபில் திருப்தி இல்லை - கஜேந்திரகுமார்

கோ குரூப் நாடுகளால் ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலே நிறைவேற்றவுள்ள தீர்மானத்தின் முதலாவது வரைபில் திருப்தி இல்லை என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தள்ளார். 

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலே நிறைவேற்றவுள்ள தீர்மானத்தின் முதலாவது வரைபை கோ குரூப் நாடுகள் வெளியிட்டுள்ளன. 

குறித்த வரைபு வெளியிடுவதற்கு முதல் இங்கு இருக்கக்கூடிய கட்சிகளும், சிவில் சமூகமும் இணைந்து கடிதம் ஒன்றை மனித உரிமைகள் ஆணையாளருக்கும் உறுப்பு நாடுகளிற்கும் விசேடமாக கோ குரூப் நாடுகளிற்கும் அனுபப்பட்டிருந்தது.

பொறுப்புக்கூரல் என்ற விடயம் மனித உரிமைகள் பேரவையிலிருந்து எடுக்கப்பட்டு மேல் இடத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இரண்டாவதாக இலங்கை தொடர்பாக தொடர்ந்து நடக்கின்ற மனித உரிமைகளை அவதானிக்க மனித உரிமைகள் அலுவலகம் ஒன்றை அமைப்பது தொடர்பிலும், மூன்றாவதாக நீதிமன்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கு சாட்சியங்களை திரட்டுவது உள்ளிட்ட விடயங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில் தற்போது வெளியான வரைபை நாங்கள் பார்க்கின்றபோது இதுவரை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் மிகவும் பலவீனமான வரைபாகத்தான் நாங்கள் அதை பார்க்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

பொறுப்புக்கூரல் என்ற விடயத்தை வெளியில் எடுக்க வேண்டும் என்று நோங்களே கேட்டிருக்கின்ற இடத்தில், அவ்விடயம் பெரிய அளவில் குறிப்பிடப்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. சர்வதேச குற்றவியல் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற தேவை வலியுறுத்தப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது.

ஆனால் துரதிஸ்டவசமாக குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கை தவிர்க்கப்பட்டுள்ளமையானது கடும் ஏமாற்றமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி நிருபர் நிபோஜன்

No comments:

Post a Comment