மலையக தமிழர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக தொடர்ந்தும் உதவி - இலங்கை தொழிலாளர் காங்கிரஸிடம் தெரிவித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Thursday, January 7, 2021

மலையக தமிழர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக தொடர்ந்தும் உதவி - இலங்கை தொழிலாளர் காங்கிரஸிடம் தெரிவித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் உள்ள இந்திய தூதுவரின் அலுவலகத்தில் இன்று (07) காலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள், வீடமைப்பு திட்டங்கள் சம்பந்தமாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், மலையக தமிழர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக இந்தியா தொடர்ந்தும் உதவியளிக்கும் என சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டுத்துறை மேம்பாடுகளுக்கும் இந்தியாவின் ஒத்துழைப்புகள் தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின் போது இலங்கைகக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்கேல் பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் ,நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதப்பாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் சந்திப்பில் பங்கேற்றனர்.

மலையக நிருபர் கிரிஷாந்தன்

No comments:

Post a Comment