அவசர பொலிஸ் சேவை தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டவர் கைது! - News View

About Us

About Us

Breaking

Thursday, January 7, 2021

அவசர பொலிஸ் சேவை தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டவர் கைது!

119 என்ற அவசர பொலிஸ் சேவைக்கு தொடர்பினை மேற்கொண்டு போலியான தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில் தொஹிவளை பகுதயில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெஹிவளை கல்தெரா வீதியில் வசிக்கும் 40 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், நேற்றையதினம் அவரை கல்கிஸை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் அவரை ஜனவரி 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற சம்பவமொன்று தொடர்பில் சந்தேகநபர் செவ்வாய்க்கிழமை 119 என்ற பொலிஸ் அவசர எண்ணை தொடர்பு கொண்டு, வேண்டுமென்றே தவறான தகவல்களை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

அண்மையில் நாடு திரும்பிய அவர் ஐக்கிய அமெரிக்க மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் நீண்ட காலம் தங்கியிருந்தமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எவ்வாறெனினும் 119 என்ற பொலிஸ் அவசர சேவை இலக்கத்தை தொடர்பு கொண்டு பொலிஸாரை தவறாக வழிநடத்துவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ள பொலிஸார், அவ்வாறான சம்பவங்களில் ஈடுபடுவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment