அரச நிறுவனங்கள் எதனையும் இராணுவம் கையகப்படுத்தவில்லை, நாட்டின் முழு சிறைச்சாலை முறைமையும் சீர்திருத்தப்படும் - பாதுகாப்பு செயலாளர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 5, 2021

அரச நிறுவனங்கள் எதனையும் இராணுவம் கையகப்படுத்தவில்லை, நாட்டின் முழு சிறைச்சாலை முறைமையும் சீர்திருத்தப்படும் - பாதுகாப்பு செயலாளர்

இராணுவத்தால் பொறுப்பேற்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் திட்டமானது ஒரு தற்காலிக நடவடிக்கையாகும் எனவும் அரச நிதியை சேமிக்கும் பொருட்டு அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமையவே முன்னெடுக்கப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.

“அரச நிறுவனங்களை இராணுவம் ஒரு போதும் கையகப்படுத்தவில்லை” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

புதிவாளர் நாயகம் திணைக்களத்தின் கொழும்பு மாவட்டத்திற்கான உதவி பதிவாளர் நாயகம் அலுவலகத்தின் அங்குரார்ப்பன நிகழ்வில் கலந்துகொண்ட பாதுகாப்புச் செயலாளரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவித்த அவர் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஏனைய நடவடிக்கைகள் எவ்வித மாற்றங்களின்றி வழக்கம் போன்றே தொடர்கின்ற அதேவேளை, சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் பணியினை மட்டுமே இராணுவம் பொறுப்பேற்றுள்ளது என்றார்.

மேற்படி நடவடிக்கையானது அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட ஒரு நிரந்தர முயற்சி அல்ல என்பதை மீண்டும் வலியுறுத்திய பாதுகாப்புச் செயலாளர், இராணுவம் அதன் முதன்மையான பணியாக இதர துறைகளில் ஈடுபாடு காட்டி வருகின்றது, எனவே தேசிய பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த நாங்கள் அவர்களை வழிநடத்துகிறோம்" என தெரிவித்தார்.

இதேவேளை உக்ரேனிய சுற்றுலாப் பயணிகள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் பதிலளித்த அவர், சபாரி சுற்றுப்பயணமானது சுற்றுலாத் துறையை மீண்டும் ஆரம்பிக்கும் ஒரு ஆரம்ப திட்டமாகவே காணப்படுகின்றது. "நாம் ஒரு வேலைத்திட்டத்தை மீண்டும் தொடங்கும்போது அதில் மேம்படுத்த வேண்டிய சில பகுதிகளும் காணப்படும்" என சுட்டிக்காட்டினார்.

"சுற்றுலாத் துறையின் மறுமலர்ச்சி மிக முக்கியமானது, ஏனெனில் இதன் மூலம் ஹோட்டல் உரிமையாளர்கள் உட்பட இந்த துறையில் ஈடுபட்டுள்ள பல இலங்கையர்கள் தங்கள் வருமானத்தை இழந்துள்ளனர்" என அவர் குறிப்பிட்டார்.

எனவே, சரியான நேரத்தில் நாட்டிற்கு கொண்டு வரப்படும் கொவிட்-19 தடுப்பூசி சிறந்த பலாபலனை தரும் என தான் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் தகனம் செய்யப்படுவது தொடர்பான சர்ச்சைக்குரிய பிரச்சினைக்கு பதிலளித்த அவர், இதற்கான ஒரு தெளிவான தீர்மானம் குறுகிய காலத்திற்குள் அரசாங்கத்தால் எடுக்கப்படும்" என குறிப்பிட்டார்.

சிறைச்சாலை வளாகத்தினுள் தடை செய்யப்பட்ட பொருட்களை வீசுவது குறித்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர், “நாங்கள் இதுவரை சிறைச்சாலை முறைமையை நெறிப்படுத்தியுள்ளோம்” என்றும், “சிறைச்சாலைகளில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தியுள்ளோம், மேலும் இந்த அமைப்பை இயக்க புதிய சிறைச்சாலை அதிகாரிகளை நியமிக்கும் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.

"பாதுகாப்பு மட்டுமல்லாமல், கைதிகளுக்கு வழங்கப்பட்ட வசதிகள் குறித்தும் நாம் அவதானம் செலுத்தியுள்ளோம்" என அவர் மேலும் குறிப்பிட்டார்.

சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட தீவிரமான சோதனைகளின் விளைவாகவே போதைப்பொருள் தொடர்பான கைதிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்" என குறிப்பிட்ட பாதுகாப்பு செயலாளர், பிணை பெற்ற அநேகமானவர்களில் சட்டவிரோத போதைப்பொருட்களுக்கு அடிமையான இளைஞர்களும் உள்ளனர்" என தெரிவித்தார்.

அவர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் மீண்டும் ஒன்றிணைக்கப்படவுள்ளனர். அவர்களுக்கு பிணை வழங்கப்படுவதன் நோக்கம் இதுவாகும் என தெரிவித்த ஜெனரல் குணரத்ன, "நாட்டின் முழு சிறைச்சாலை முறைமையும் சீர்திருத்தப்படும்" எனவும் அவர் வலியுறுத்தினார்.

தொற்று நோய்களுக்கு மத்தியிலும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக பதிலளித்த அவர், “சட்ட அமுலாக்க நிறுவனங்கள் தொடர்ந்தும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்கிறன என்பதற்கு இன்றைய தினம் (ஜனவரி, 04) 104 கிலோ ஐஸ் ரக போதைப்பொருள் மற்றும் 80 கிலோ ஹஷிஷ் போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சம்பவம் சான்றாக அமைகிறது" என தெரிவித்தார்.

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான வழிமுறைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டதன் விளைவாக நாட்டிற்குள் பாரியளவில் போதைப் பொருட்கள் தற்பொழுது கொண்டுவரப் படுவதில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment