கல்முனையில் காலையில் தொழிலாளிகள் கூடுமிடம் கல்முனை கடற்கரை வீதியாகும். இந்த வீதி தற்போது முடக்கப்பட்டு பாதுகாப்பு கடமையில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வீட்டு வேலைக்கோ அல்லது வயல் வேலைக்கோ அல்லது வேறு வேலைகளுக்கோ தொழிலாளர்கள் இந்த இடத்திலிருந்தே புறப்படுவர். அந்நிலை இப்போது இல்லை.
இந்நிலையில் ஓடாவிமார், மேசன்மார், வயல் வேலைக்கு செல்வோர் தற்போது தொழிலின்றி வீட்டிலே முடக்கப்பட்டுள்ளனர்.
கல்முனையிலுள்ள கடைகளில் வேலைக்குச் சென்று கிடைக்கும் மாதச் சம்பளத்தை நம்பி வாழ்ந்த மக்களும் அந்த வருமானத்தை இழந்துள்ளனர். மாநகரக் கடைகளில் மாதாந்த சம்பளம் பெற்று வந்த இளைஞர், யுவதிகளும் சம்பளமின்றி வீட்டிலே காலம் கழிக்கின்றனர்.
ஒரு புறம் கொரோனா மறுபுறம் அடைமழை இந்நிலை தொடரின் கல்முனையில் கூலி வேலை செய்து உழைத்து வந்த மக்களின் எதிர்காலம் மிக கஷ்டமான நிலைக்குத் தள்ளப்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
நற்பிட்டிமுனை நிருபர்
No comments:
Post a Comment