மரண வீட்டிற்கு வந்த கொரோனா நோயாளி உயிரிழப்பு - 40 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 5, 2021

மரண வீட்டிற்கு வந்த கொரோனா நோயாளி உயிரிழப்பு - 40 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

பலாங்கொடை, கிவுலவெல பிரதேசத்தில் மரண வீட்டிற்கு வந்த நபர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இதன் காரணமாக 10 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பலாங்கொடை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்தவராவார். அவர் கடந்த 29ஆம் திகதி பலாங்கொடையிலிருந்து மரண வீட்டிற்கு சென்று, அங்கிருந்து மீண்டும் இரத்தினபுரிக்கு சென்றுள்ளார்.

பின்னர் கடந்த 30ஆம் திகதி அவர் தங்கியிருந்த விடுதியில் சிலருடன் விருந்தொன்றையும் நடத்தியுள்ளார்.

இதன்போது அவர் வழுக்கி விழுந்தமையினால் நரம்பு வெடித்து இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இரத்தினபுரி வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இந்நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதென சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர் மேலதிக சிகிச்சைக்காக ஹோமாகம வைத்தியசாலைக்கு அனுப்பிய பின்னர் கடந்த 02ஆம் திகதி இரவு உயிரிழந்துள்ளார். இந்நபர் பலாங்கொடை நகரத்தின் பல இடங்களுக்கு சென்றுள்ளாரென தெரியவந்துள்ளது.

பலாங்கொடை நிருபர்

No comments:

Post a Comment