இந்திய மீனவரின் வருகையை நிறுத்த ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் : மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச் சங்க சமாச செயலாளர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 15, 2020

இந்திய மீனவரின் வருகையை நிறுத்த ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் : மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச் சங்க சமாச செயலாளர்

(மன்னார் நிருபர்)

இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையால் மன்னார் மாவட்ட மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். எனவே ஜனாதிபதி துரித நடவடிக்கைகளை எடுத்து இந்திய மீனவர்களின் வருகையைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச் சங்க சமாச செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கு மகஜர் கையளிக்கும் வகையில் மன்னார் மாவட்ட மீனவ சங்கங்களின் சமாச கிராமிய அமைப்புகளின் தலைவர்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (15) காலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மெல்லிடம் மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய இலுவைப்படகுகள் அத்துமீறி இலங்கை கடல் பகுதிக்குள் நுழைவதால் மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கோரி மகஜர் கையளிக்கப்பட்டது.

இந்திய மீனவர்களின் வருகையால் வட பகுதி மீனவர்கள் குறிப்பாக மன்னார் மாவட்ட மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றார்கள்.
அவர்களின் வருகையால் எமது மீனவர்களின் வலைகள்,படகுகள் தொடர்ந்தும் சேதத்துக்குள்ளாக்கப்பட்டு வருகின்றன. மேலும் கடல் வளங்கள் சூறையாடப்படுகின்றன.

எனவே குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக ஜனாதிபதி தலையிட்டு, இந்திய இலுவைப் படகுகளின் வருகையை நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment