கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை மாலைதீவிற்கு கொண்டு செல்வது சாத்தியமற்ற விடயம் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இதனை தெரிவித்துள்ளார்.
இது பெருமளவு அரச நிதியை அல்லது பொதுமக்களின் பணத்தினை செலவு செய்ய வேண்டிய நடவடிக்கை என குறிப்பிட்டுள்ள அவர் நாட்டிற்குள்ளேயே உடல்களை அடக்கம் செய்ய அனுமதிப்பதன் இந்த செலவினை கட்டுப்படுத்தலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
விஞ்ஞான ரீதியிலான தரவுகளை ஆராய்ந்து உடல்களை அடக்கம் செய்வதற்கான பொருத்தமான இடத்தினை அடையாளம் காண வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உடல்களை அடக்கம் செய்வது உலகம் முழுவதிலும் பின்பற்றப்படுகின்றது என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர் அனைத்து தரப்பினரினதும் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment