கித்துல் உற்பத்தியை பிரதான பெருந்தோட்டத்துறை பயிராக பெயரிடுவதற்கும், கித்துல் அபிவிருத்தி அதிகார சபையை நிறுவுவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரண சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைவாக அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.
இது தொடர்பாக 14.12.2020 அன்று நடைபெற்ற அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
கித்துல் உற்பத்திக் கைத்தொழில் இலங்கையின் தனித்துவமான கைத்தொழிலாகவும் அந்நிய செலாவணியை ஈட்டித்தரக் கூடிய கைத்தொழிலாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. கித்துல் உற்பத்திக் கைத்தொழிலை மேம்படுத்துவதற்காக கடந்த காலங்களில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சமகால அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் உள்ளுர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் மக்கள் மைய பொருளாதாரத்தை உருவாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் கித்துல் செய்கைக் கைத்தொழிலை விரிவுபடுத்துதல் பொருத்தமானதென அடையாளங் காணப்பட்டுள்ளது.
அதற்கமைய, கித்துல் பயிரை பிரதான பெருந்தோட்டப் பயிராக பெயரிடல் மற்றும் கித்துல் அபிவிருத்தி அதிகாரசபையை நிறுவுவதற்கும், பெருந்தோட்ட அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment