லண்டனில் புதிய வடிவத்தில் கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு - 3 அடுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு, இன்று முதல் அமுல் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 15, 2020

லண்டனில் புதிய வடிவத்தில் கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு - 3 அடுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு, இன்று முதல் அமுல்

லண்டன், தென்கிழக்கு பகுதிகளில் கொரோனா வைரசின் புதிய மாறுபாடு மற்றும் வடிவத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் அப்பகுதிகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

இங்கிலாந்தில் கடந்த பெப்ரவரி மாதம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இதனால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. சில மாதங்களுக்கு பிறகு பாதிப்பு குறைந்ததால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா வைரசின் பரவல் அதிகரித்ததை தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே தலைநகர் லண்டன், தென்கிழக்கு பகுதிகளில் கொரோனா வைரசின் புதிய மாறுபாடு மற்றும் வடிவத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் அப்பகுதிகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

லண்டனில் தொற்று பாதிப்பு உயர்ந்துள்ளதால் அங்கு 3 அடுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவை இன்று முதல் அமுலுக்கு வருகிறது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மெட் ஹன்ஹாக் கூறியதாவது லண்டன் மற்றும் நாட்டின் சில பகுதிகளில் 3 அடுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி தியேட்டர்கள், மால்கள் மூடப்படும். பொது இடங்களில் 6 பேருக்கு மேல் ஒன்றாக கூடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசின் புதிய மாறுபாடு விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதுவும் தெற்கு இங்கிலாந்தில் வைரஸ் வேகமாக பரவுவதற்கு காரணமாக இருக்க கூடும்.

சில இடங்களில் ஒவ்வொரு வாரமும் பாதிப்பு 2 மடங்காகி வருகிறது. மக்களை பாதுகாக்கவும், அதிக அளவு பாதிப்புக்களையும், நீண்ட கால பிரச்சினைகளையும் குறைக்க முடியும் என்பதால் கட்டுப்பாடு நடவடிக்கைகள் மிகவும் அவசியமானது இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment