டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, December 23, 2020

டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

1996 ஆம் ஆண்டின் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

1996 ஆம் ஆண்டு 02 ஆம் இலக்க கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை சட்டத்தின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தும் போது அதிகாரிகளுக்கு ஏற்படுத்தும் இடையூறுகளுக்கு எதிராக தண்டனைகளை அதிகரிக்கும் வகையில், இச் சட்டத்தை திருத்தியமைக்க தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதியில், சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக ஒழுங்குபடுத்தல்களுக்கான ஏற்பாடுகளை உள்வாங்கி இச் சட்டத்தைத் திருத்தியமைப்பதற்காக 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 07 ஆம் திகதி அமைச்சரவையால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களுக்கமைய சட்டமூலத்தை தயாரிப்பதற்காக சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்கவதற்காக கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad