சுதந்திரக் கட்சியுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை - குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆராய்வு - News View

Breaking

Post Top Ad

Wednesday, December 23, 2020

சுதந்திரக் கட்சியுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை - குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆராய்வு

தங்களை புறக்கணிப்பதாகவும் அரசிலிருந்து ஒதுங்கப் போவதாகவும் சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ள நிலையில் சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ள குறைபாடுகள் தொடர்பில் சுதந்திரக் கட்சியுடன் அரசாங்கம் பேச்சு நடத்தி வருவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். 

தங்களை புறக்கணிப்பதாகவும் அரசிலிருந்து ஒதுங்கப் போவதாகவும் சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் மேலும் குறிப்பிட்ட அமைச்சர், இது அரசியல் சார்ந்த விடயமாகும். இது தொடர்பில் அரசாங்கம் தேவையான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகிறது.அவ்வாறு பிரச்சினையிருந்தால் அரசியல் ரீதியில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஷம்ஸ் பாஹிம்

No comments:

Post a Comment

Post Bottom Ad