கொழும்பு, கொம்பனித் தெரு ரயில் நிலைய ஊழியர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலில் அனுப்பப்பட்டிருப்பதால், குறிப்பிட்ட ரயில் நிலையம் ஊழியர்கள் எவரும் இல்லாமல் செயற்படுகின்றது.
கொம்பனித் தெரு ரயில் நிலைய பொறுப்பதிகாரி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்தே ஊழியர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
ரயில் பயணிகள் கொம்பனி வீதி ரயில் நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கு அவர்களிடம் டிக்கட் கேட்டகப்படமாட்டாது.
கொம்பனித் தெரு ரயில் நிலையத்திலிருந்து பயணம் செய்பவர்களிடம் டிக்கட் கேட்க வேண்டாம் என ஏனைய ரயில் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment