புத்த சாசனத்திற்கு தங்கள் பிள்ளைகளை அர்ப்பணித்த பெற்றோர்களுக்காக ஆரம்பிக்கப்படும் "மிஹிந்து வீடமைப்புத் திட்டம்" - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 2, 2020

புத்த சாசனத்திற்கு தங்கள் பிள்ளைகளை அர்ப்பணித்த பெற்றோர்களுக்காக ஆரம்பிக்கப்படும் "மிஹிந்து வீடமைப்புத் திட்டம்"

புத்த சாசனத்திற்கு தங்கள் பிள்ளைகளை அர்ப்பணித்த பெற்றோர்களுக்காக ஆரம்பிக்கப்படும் "மிஹிந்து வீடமைப்புத் திட்டம்" குறித்த ஊடக சந்திப்பு மகா சங்கத்தினர் மற்றும் அரச அதிகாரிகளின் பங்களிப்புடன் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சில் நடைபெற்றது.

இந்த ஊடக சந்திப்புக்கு "மிஹிந்து வீட்டுத் திட்டத்தின் ஒழுங்கிணைப்புக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் களனிப் பல்கலைக்கழகத்தின் கலாச்சார ஆய்வுப் பிரிவின் மூத்த விருவுரையாளர் பேராசிரியர் வண. இந்துராகாரே தம்மரத்ன தேரர், வண. வலஸ்முல்ல தம்ம விமல தேரர் மற்றும் வண. அலுதெபொல குணரத்ண தேரர் உள்ளிட்ட பலர் மற்றும் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மானத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளர் கீர்த்தி ரஞ்ஜித் அபேவர்தனவும் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தின் 9 ஆவது அத்தியாயம் மத முன்னுரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆலோசனையின் படி கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்தவின் கருத்துக்கு ஏற்ப புத்த சாசனம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் ஒத்துழைப்புடன் இந்தத் திட்டம் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் அமைச்சின் ஏற்பாட்டின் கீழ் செயல்படுத்தப்படும்.

புத்த சாசனத்திற்கு தமது பிள்ளைகளை அர்ப்பணித்த வீடற்ற பெற்றோர்களுக்காக இந்த வீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். ஒரு வீட்டின் நிர்மாணத்திற்காக ரூபா 6 இலட்சம் உதவித் தொகையாக வழங்கப்படும். 

இந்த வேலைத்திட்டம் அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படவுள்ளது. மேலும் இது தொடர்பான விண்ணப்பங்களை பிரதேச செயலகங்கள் மூலம் சமர்ப்பிக்க முடியும்.

No comments:

Post a Comment