இனவெறி அரசியலும் - இலங்கையும் - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 2, 2020

இனவெறி அரசியலும் - இலங்கையும்

அரசியல் உலகு என்பது பல பரிமாணங்களை எடுத்திருக்கிறது. வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொட்டு கிறிஸ்த்து ஆண்டு ஆரம்பம் முதல் இன்றுவரை அரசியல் மக்களையே மையப்படுத்தியதொன்றாகும். அதில் பலதரப்பட்ட அமைப்பு ரீதியான முறைமைகள் காணப்பட்டிருக்கின்றன. இதில் அரசு என்பது வேறு அரசாங்கம் என்பது வேறு. அரசின் அரசாங்கத்தைக் கைப்பற்றவே மனிதன் அரசியலைப் பிரயோகிக்கிறான்.

மன்னர் குடுப்ப ஆட்சிக்காலமான அரச பரம்பரை ரீதியான அரசியல் இன்று மங்கிப் போய் விட்டது. அதில் இன்றும் நிலைத்து பெரும் அரச பாரம்பரியமும் பிரபலமும் கொண்டவர்களே பிரித்தானிய முடிக்குரிய எலிசபத் மகாராணியார் அவர்களின் பரம்பரை. ஆனால் அங்கும் இன்று பிரதிநிதித்துவ அரசியல் இல்லாமலில்லை. ஆனால் அரசின் தலைவர் மகாராணியாரே. ஒரு காலத்தில் இலங்கை, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் பிரித்தானியர்களின் முடிக்குரிய நாடுகளாகவே இருந்தன. சுதந்திரம் பெற்ற நாள் தொடக்கம் இன்றுவரை இந்நாடுகள் மக்கள் பிரதிநிதி அரசியலையே செய்து வருகின்றன.

பிரதிநிதித்துவ அரசியல் என்பது அனைத்து இன,மத,மொழி,கலாச்சார,பாரம்பரிய மற்றும் கொள்கைகளைக் கொண்ட மக்களையும் அவர்களின் நடைமுறைகளையும் அங்கீகரித்து சட்ட ரீதியாக அவர்களுக்கு உரிமைகளை வழங்குவதே ஆகும்.

ஆனால் இம்முறைமை என்பது கட்டமைப்பை ஏற்படுத்தி வாழும் மனிதர்களில் அதனைப் பின்பற்றியோ நடைமுறைப்படுத்தியோ வழக்கப்படாத மனிதர்கள் மத்தியில் தோல்வியையே கண்டுள்ளது எனலாம்.

அந்த வகையில் ஒரே மாதிரி உடல் அம்சம் கொண்ட மனிதனால் ஒன்றாக வாழ முடியவில்லை என்பதே வழமை.

இதன் அடிப்படையே இனவாதமாகும்! இனவாதம் என்பது இன்று நேற்று உருவானதல்ல. சுதந்திர இலங்கையை பிரித்தானியர் சாதாரணமாக கையளித்துவிட்டு பறப்படவில்லை இன ரீதியான பிளவுகளை உருவாக்கியே சென்றிருக்கிறார்கள் எனலாம்.

1956 ஆம் ஆண்டிலிருந்தே அரசியலமைப்பு ரீதியாக இனவாதம் இந்நாட்டில் தலையெடுத்தது எனலாம். 1980 களில் இனவாதம் சலங்கை கட்டி உருவெடுத்ததுடன் காரணமின்றியே பழி எடுக்கவும் செய்தது.

இதன் விளைவே தமிழீழு விடுதலைப் புலிகள். 1990 ல் LTTE அமைபு வடபுல முஸ்லிம் மக்களை அங்கிருந்து வெளியேற்றிய துயர் மட்டுமல்ல கிழக்கிலும் பல கொடூரங்கள் அவர்களால் முஸ்லிம் மக்கள் மீது கட்டவிழ்க்கப்ட்டன. அதுவரை தமிழ் முஸ்லிம் மக்களின் உறவு உடன் பிறவா சகோதரர்களாகவே இருந்து வந்தது.

2009 ஆம் ஆண்டு ராஜபக்ஷ ஆட்சியிலேயே LTTE முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அந்த நேரம் தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்களே தனது அண்ணன் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சியில் பாதுகாப்புச் செயலாளராக இருந்தார்கள்.

அன்று ஆரம்பமானது முஸ்லிம்களுக்கும் பௌத்த சிங்கள மக்களுக்கும் இடையிலான பிளவை ஏற்படுத்தி அரசியலை இலகுவாக கையாளும் தந்திரம் என்றும் சொல்ல முடியும். 

ஆனால் இதுவரை இலங்கை முஸ்லிம்கள் எத்தனை துயரங்களைக் கண்டும் ஆயுதம் ஏந்தாதவர்கள்! அதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியின் விடுதலைத் தோற்றமும் காரணம் எனலாம். 

கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் கூட முஸ்லிம் பெயர் தாங்கிகளால் ஏற்டுத்தப்பட்ட சர்வதேச நிகழ்ச்சி நிறல் என்றும் முஸ்லிம் மக்களின் தூய பெயரை கலங்கப்படுத்த அதன் மூலம் அரசியல் இலாபம் காண ஏற்படுத்தப்பட்ட உள்நாட்டு கூலிப்படையின் சதி என்றும் இதுவரை ஊர்ஜிதமாகியுள்ளது.

இன்று உலகில் பெரும் தலையிடியாக உருவெடுத்துள்ளது தான் கொரோனா நோய்த் தொற்று! இந்த நோயால் இறப்பவர்களை அடக்கம் செய்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இதனை உலக நாடுகள் அனைத்தும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தி ஏற்று அங்கீகரித்து நடைமுறையும் செய்து வருகிறது. 

இப்படியாக இருக்க இலங்கையில் மாத்திரம் அது முடியாத காரியம் என்றும் சுயாதீன சுகாதார நிபுணத்துவ குழுவொன்றை ஏற்படுத்தி அவர்களின் முடிவையே வேத வாக்காக கொள்கிறோம் என்று அரசாங்கம் ஜாடி போடுகிறது.

அப்படியென்றால் உலகிலேயே அதி உச்ச நிபுணத்துவம் கொண்ட ஆராய்ச்சியாளர்கள் இலங்கையின் சுகாதார அமைப்பா? என்ற கேள்வியும் எழாமலில்லை. 

புதைக்க முடியாது எரிப்பது தான் என்பதில் உறுதியாக இருக்கிறதாம் அந்த நிபுணர்கள் குழு. அவர்களின் முடிவை அரசாங்கத்தால் எதுவும் செய்ய முடியாது என்பதும் வேடிக்கையாக உள்ளது.

இந்த எரிப்பு என்ற முடிவிலிருந்து புதைப்பதை நடைமுறைப்படுத்துமாறு சர்வதேச அமைப்புக்கள் அரசாங்கங்கள் உள்நாட்டு அமைப்புக்கள் முக்கியஸ்தர்கள் கௌரவ.பிரதிநிதிகள் போர்க் குரல் எழுப்பியும் அரசாங்கம் ஜாடைக் கதை சொல்லி கைவிரிக்கிறது என்றால் என்னவாக இருக்கும்?

20 ஆம் திருத்தத்தில் அதிகாரத்தை அதிகரிக்க முடிந்த அரசாங்கம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்று முழு அரசாங்கமும் இன்று கைவிரித்து முஸ்லிம்களின் உணர்வுகளில் குளிர் காய்கிறது என்றால் அது என்னவாக இருக்கும்?

நீதிமன்றம் சென்றால் வழக்கின் இடை நடுவே சட்டமா அதிபர் அலுவலகத்திலிருந்து கடிதம் வருகிறது. மறு நாள் வழக்கு தள்ளுபடி!

இவற்றையெல்லாம் பார்க்கும் போது என்னவாக முடிவெடுக்க முடியும்? 

நாட்டில் முத்துறையும் இந்த விடயத்தில் மௌனம் காக்கிறது! அண்மையில் தொலைக்காட்சி வாயிலாக அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் ஆற்றிய உரையில் "நீதித் துறையில் எந்தத் தலையீடும் போடவில்லை" என்றார்கள். அதில் தற்பொழுது சந்தேகம் எழுவதாகவே ஊகிக்க முடிகிறது.

இதே ராஜபக்ஷ ஆட்சிக் காலத்திலேயே முன்னால் பிரதம நீதியரசர் ஸ்ரீராணி பண்டானாயக்க அவர்கள் பழி சுமத்தப்பட்டு பதவி விலக்கப்பட்டார்கள். அதற்கு மைத்ரி ஆட்சி தேசிய அரசாங்கமாக மலர்ந்த பிறகு மீண்டும் பதவிக்கு வந்து இருபத்தி நான்கு (24) மணி நேரத்தில் மீண்டும் பதவி துறந்தார்.

ஸ்ரீராணி பண்டாரனாயக்க அவர்கள் மீது பழி சுமத்தி பதவி விலக வைத்தது அவர்களின் பேச்சைப் புறந்தள்ளி நீதிக்கு நேராக நடந்தமையே காரணமாகும். இன்றும் அப்படியே நடந்திருக்கலாமோ என ஊகிக்கத் தோனுகிறது! அதனாலேயே இந்த நாட்டில் நீதி இறந்து விட்டதாக மக்கள் பேசுவது மட்டுமல்லாமல் சமூக வலயதளங்களிலும் பரவலாக தைரியமாக பதிவிடுகிறார்கள்! அது மாத்திரமன்றி இன்றெல்லாம் நீதிமன்ற தீர்ப்புக்களும் பக்கச்சார்பாக இருப்பதாகவே காண முடிகிது!

அரசாங்கம் இன ரீதியாக நேர்மை இன்றி செயற்படுதல் மக்களின் உணர்வுகளை சின்னாபின்னம் செய்கின்றமை நீதி கைவிட்டமை நீதித்துறை சுயாதீனம் இழந்து விட்டது என்ற மக்களின் துடி துடித்த நிலமைக்கு இலங்கை அரசு நியாயமான அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தி என்றைக்கு இனவெறி அரசியல் முடிவிற்கு வரும் என்ற தாகம் சிறுபான்மை மக்களிடையேயும் இதை உணர்ந்த பெரும்பான்மை மக்களிடையேயும் இருந்து கொண்டே இருக்கிறது.

பஷீர் இர்ஹான் 

No comments:

Post a Comment