சிறைச்சாலைகள் சீர்திருத்தங்கள் மற்றும் சிறைக் கைதிகள் மறுவாழ்வு இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்தை நியமிக்கப்பட்டுள்ளார்.
லொஹான் ரத்வத்தை இன்று (02.12.2020) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
குறித்த பதவியில் முன்னர் சுதர்ஷினி பெர்னாண்டோபு்ள்ளே இருந்துள்ள நிலையில், அவர் தற்போது ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோயியல் மற்றும் கொவிட் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து குறித்த பதவி வெற்றிடத்திற்கு லொஹான் ரத்வத்தை சிறைச்சாலை சீர்திருத்தங்கள் மற்றும் கைதிகள் மறுவாழ்வு இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment