மஹர சிறைச்சாலையில் அமைதியின்மையை ஏற்படுத்துவதற்கு காரணமாக அமைந்த 125 சிறைக் கைதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இவ்வாறு அடையாளம் காணப்பட்ட கைதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர் துஷார உபுல் தெனிய கூறியுள்ளார்.
இதேவேளை மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையானது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அமையதின்மையின்போது மொத்தமாக 106 கைதிகளும், இரு சிறை அதிகாரிகளும் காயமடைந்துள்ளதுடன் 11 பேர் உயிரழந்தும் உள்ளனர்.
இந்நிலையில் 12 அதிகாரிகள் அடங்கிய குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகன்றனர்.
No comments:
Post a Comment