உன்னிச்சை, சிப்பிமடு பிரதேசத்தில் எட்டு ஏக்கர் நிலப்பரப்பில் ஐந்தாயிரம் மரக்கன்றுகள் நடும் வேலைத்திட்டம் - News View

About Us

About Us

Breaking

Monday, November 16, 2020

உன்னிச்சை, சிப்பிமடு பிரதேசத்தில் எட்டு ஏக்கர் நிலப்பரப்பில் ஐந்தாயிரம் மரக்கன்றுகள் நடும் வேலைத்திட்டம்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

ஜனாதிபதியின் "நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு" எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மர நடுகை நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் அடிப்படையில், "சேர்ந்து காப்போம் கிழக்கை" எனும் பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் அழிவுற்ற இயற்கையினை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் எட்டு (08) ஏக்கர் நிலப்பரப்பில் ஐந்தாயிரம் (5000) மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டம் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உன்னிச்சை, சிப்பிமடு பிரதேசத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு இராணுவ கட்டளையிடும் தளபதி லெப்டினன் கேணல் லசந்த ஜெயசிங்க தலைமையில் இடம்பெற்ற மரநடுகை நிகழ்வில், 231 பிரிகெட் இராணுவ படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கேணல் பிரதீப் கமகே, ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபர், சமூகசேவையாளர் எம்.பி.எம்.முஸம்மில், திணைக்களத் தலைவர்கள், இராணுவ அதிகாரிகள், முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கலந்து கொண்டனர்.

கலந்து கொண்ட அதிதிகளால் மரங்கள் நாட்டி வைக்கப்பட்டதுடன், நடப்பட்ட மரங்கள் இராணுவத்தினரால் பராமரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment