இராணுவ காலாட்படை ஆட்சேர்ப்புக்கு ஏறாவூரிலும் நேர்முகப்பரீட்சை - News View

Breaking

Post Top Ad

Monday, November 16, 2020

இராணுவ காலாட்படை ஆட்சேர்ப்புக்கு ஏறாவூரிலும் நேர்முகப்பரீட்சை

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

இலங்கை இராணுவத்தின் காலாட்படைக்கு படை வீரர்களை இணைத்துக் கொள்வதற்கான இரண்டாம் கட்ட நேர்முகத் தேர்வு ஏறாவூர் நகர பிரதேச வளாகத்தில் திங்கட்கிழமை 15.11.2020 இடம்பெற்றது.

கேட்டுக் கொள்ளப்பட்டதின்படி 18-27 வயதிற்கிடைப்பட்டவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

முன்னதாக வெள்ளிக்கிழமை 14.11.2020 இடம்பெற்ற முதலாம் கட்ட நேர்முகத் தேர்வில் தமிழ் சிங்கள முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த சுமார் 60 இளைஞர்கள் பிரசன்னமாகியிருந்ததாக நேர்முகத் தேர்வை நடத்திய இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகளில் இராணுவ ஆட்சேர்ப்புக்கான நேர்முகத் தேர்வுகள் இடம்பெறுவது இதுவே முதற் தடவையாகும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad